நேபாளம் காத்மண்டுவில் இடம்பெற்ற கலவரத்தின் போது தனது உயிரை பொருட்படுத்தாது. இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களை காப்பாற்றியதற்கு மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
தங்களுடைய செயல் மனிதத்தின் சிறந்த பண்புகளான கருணை, தியாகம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்துவதாக பிரதமரின் துணை அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சோதனைகள் நிறைந்த காலங்களில் தைரியமும் உறுதியும் உடையவர்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருப்பதோடு, இந்த அவசர காலத்தில் தாங்கள் செய்த செயல்கள் பலரையும் தொடர்ந்து ஊக்குவித்துக்கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் எதிர்காலத்திலும் தாங்கள் இந்த உயர்ந்த பண்புகளைத் தாங்கியவாறு, தங்களுடைய முன்னுதாரணம் மூலம் பிறரை ஊக்குவித்து, பிறருக்கு வழிகாட்டி உலகை உருவாக்க வேண்டும் என தனது வாழ்த்து கடிதத்தில் மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.
