தொடர்ந்து பின் தள்ளிப் போன சந்திப்பு திடீரென நடக்கவுள்ளது!

0
187

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியினை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது.

எனினும் அதுகுறித்து ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ தொடர்ச்சியாக மௌனமாகவே இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் அவர்கள் கோரிக்ககை விடுத்திருந்தனர். எனினும் ஜனாதிபதி அன்றைய தினம் செயலகத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here