வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

Date:

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத் திட்டமாக அமையவில்லை. நாட்டு மக்கள் இன்று பல துயர்கரமான சூழ்நில்மைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. வேலையின்மையும் அதிகரித்துள்ளது. 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% மேலாக பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களினது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளன. இவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட உரை முடிந்த பின்னர், பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள் என அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வுகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்த வரவுசெலவுத் திட்டமானது ஏமாற்று, பொய்கள் வேலைகள் தமது இருப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வரவுசெலவுத் திட்டமாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சட்டக் கட்டமைப்புச் சட்டமொன்றை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கூறினாலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்நேரத்தில், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் இன்று திசைகாட்டி அரசாங்கத்தைச் சேர்ந்தோர் இந்த போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிற்பாடு இவற்றை ஊடகங்களில் காண்பிப்பதை தவிர்த்து அதனை மறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக காணப்படுகின்றது. மக்களுக்கு நிவாரணம் வழங்காத, IMF எழுதிய வரவுசெலவுத் திட்டத்தின் வடிவத்தை எடுத்த வரவுசெலவுத்திட்டமாகும். வறுமை ஒழிப்பு திட்டங்கள் எதுவும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடங்கி காணப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

முன்மொழியப்பட்டுள்ள வரவுசெலவு கருத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன. 2025 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை பார்க்கும் போது, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஒதுக்கீடுகளினதும் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. இவ்வாறு முன்னேற்ற மீளாய்வுகளை சமர்ப்பிக்காத  நிதியமைச்சரான ஜனாதிபதி அவர்கள் பொய்களை அடிக்கி வைத்தார். இந்த ஆளும்  தரப்பினர் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கத்திற்கு இன்னும் மனச்சாட்சி வரவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...