நேற்று (5) இரவு கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்தபோது கடற்படையினரால் ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உரப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
படகின் உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் போதைப்பொருள் தொகை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
