அம்பலாங்கொட நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகாமையாளரை இலக்காகக் கொண்டு இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நிறுவனத்தின் முகாமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறினர்.
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தவராக இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காகவும் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
