நுகேகொடை சந்தியில் கொஹுவல நோக்கிச் செல்லும் சாலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்கிஸ்ஸ பிரதேச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
