இலங்கை மக்களுக்கு உதவிய லண்டன் தொழிலதிபர்

0
62

லண்டன் தொழிலதிபர், “இலங்கையை மீளமைக்கும் நிதி” (Rebuilding Sri Lanka Fund)க்கு 10 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

டிட்வா புயல் (Cyclone Ditwah) காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், இந்த இயற்கை பேரழிவால் சீரழிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்கவும் இலங்கை அரசு “இலங்கையை மீளமைக்கும் நிதி”யை நிறுவியது.

இந்த தேசிய முயற்சிக்கு ஆதரவாக, வேலுப்பிள்ளை சிவசுந்தரம் 10 மில்லியன் ரூபாய் என்ற பெருந்தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் செயல்படும் வெஸ்டர்ன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்தின் நிறுவனர் ஆகிய சிவசுந்தரம், தனது நன்கொடையை இன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா சனத் குமணாயக்கவிடம் கையளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here