வாகனங்களை பதிவு செய்வதிலும், உரிமம் மாற்றம் செய்வதிலும் வரி செலுத்துபவர்களை அடையாளம் காணும் எண் (TIN) கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், இந்த நடைமுறை 2026 ஜனவரி 05 முதல் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள், டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் (த்ரீவீல்) ஆகியவற்றைத் தவிர,
மற்ற அனைத்து புதிய வாகனங்களின் பதிவின்போதும் மற்றும் உரிமம் மாற்றம் செய்யும் போதும், சம்பந்தப்பட்ட புதிய உரிமையாளரின்
- தேசிய அடையாள அட்டை எண் அல்லது
- வணிக பதிவு எண்
உடன் வரி செலுத்துபவர் அடையாள எண் (TIN) ஆகியவை, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய பதிவு தரவு முறைமை மற்றும் உரிமம் மாற்ற தரவு முறைமையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
