அம்பாறை – சம்மாந்துறை மலையடி கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடி பெல்கனியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்செடிகளுடன் பூச்சாடிகள் வளர்ப்பது போல கஞ்சா செடிகளை வளர்த்துவந்துள்ள இரண்டு கஞ்சா செடிகளை மீட்டதுடன் 33 வயதுடைய வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.