மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. இதனையடுத்து, அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
அத்துடன், காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்துடன் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்காரணமாக கொழும்பு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.