மன்னார் பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி

0
171

மன்னார் பிரதேச சபையின் 2022ஆம. ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது. 

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மோசடிக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு முன்னாள் ஆளுநரின் விசாரணையின் பின்பு பதவி பறிக்கப்பட்டபோதும் தற்போதைய ஆளுநர் அந்த பதவி பறிப்பு வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்தமையால் தவிசாளர் தப்பி பிழைத்தார். 

இவ்வாறு தப்பி பிழைத்த தவிசாளர் சமர்ப்பித்த  2022ஆம. ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமே  இன்று முதற் தடவையாக தோற்கடிக்கப்பட்டது. 

இன்று தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டால் தவிசாளர் பதவி இழக்கும் நிலமை ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here