லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அடுத்த மூன்று மாதங்களில் நிறுவனம் மூடப்படும் என “Litro Gas Safety Organisation” தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு லிட்ரோ எரிவாயு பாதுகாப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.