இன்றுமுதல் முகக் கவசம் ,குடிநீர் போத்தல்,உள்நாட்டு பால்மா ஆகியவற்றின் விலை உயர்கிறது

Date:

முகக் கவசத்தின் விலையை 30 வீதத்தினால் அதிகரிப்பதாக இலங்கை முகக் கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவிக்கின்றார்.

குடிநீர் போத்தல் விலை அதிகரிப்பு

உற்பத்தி பொருட்களுக்கான மூலப் பொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வெற்று போத்தல்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களினால், குடிநீர் போத்தலுக்கான விலையை அதிகரித்த இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதன்படி, ஒன்றரை லீட்டர் குடிநீர் போத்தலின் விலையை 120 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 5 லீட்டர் குடி போத்தலின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு
உள்நாட்டு பால் மா நிறுவனமான பெல்வத்த நிறுவனமும், பால் மாவின் விலையை அதிகரித்துள்ளது.

பெல்வத்த பால் மா நிறுவனம் 400 கிராம் பால் மா பக்கெட்டொன்றின் விலையை 105 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில், 400 கிராம் பெல்வத்த பால் மா பக்கெட்டொன்றின் புதிய விலை 625 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் பெல்வத்த பால்மா பக்கெட் ஒன்றின் விலை 270 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1570 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...