ஜனாதிபதியின் அனைத்து கட்சி மாநாட்டை புறக்கணிக்க பல கட்சிகள் முடிவு

0
215

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கூட்டப்படவுள்ள சர்வகட்சி மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அனைத்துக் கட்சி மாநாட்டைப் புறக்கணிக்க பல எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளன. நேற்றைய மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்ததுடன், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 குழுக்களில் உள்ள பல கட்சிகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக தெரியவந்துள்ளது .

அந்த 11 கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் அத்துரலியே ரத்தின தேரர் ஆகிய கட்சிகள் மாத்திரமே இம்மாநாட்டில் பங்கேற்க தீர்மானித்துள்ளன.

ஜாதிக நிதஹஸ் பெரமுன (ஜே.என்.பி) மற்றும் பிவித்துரு ஹெல உறுமய (ஜாதிக ஹெல உறுமய) ஆகியன அனைத்துக் கட்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாக ஆரம்பத்திலேயே தெரியவந்துள்ளது .

எவ்வாறாயினும், எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் குழுவான ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லைஎனவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க நாளை பாராளுமன்ற குழு கூட்டம் கூடி அங்கு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here