ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மீள் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

0
244

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மின்சார விநியோகம், வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் தொடர்பான பணிகள், மருத்துவ சிகிச்சை நிலையப் பணிகள் மற்றும் அதற்கு நிகரான பணிகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பில் ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பு மீளவும் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஏற்கனவே 2022.02.11 என திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here