வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

0
282

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிய நிலையில் கடத்தி வந்த உகாண்டா பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து இலங்கை வந்த 43 வயதான உகாண்டா பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது வயிற்றில் மாத்திரைகள் வடிவிலான பொதிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரிடமிருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட கொக்கெய்ன் அடங்கிய மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த எடை சுமார் 600 கிராமுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 10 மில்லியன் (1 கோடி) ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை ஒரு விநியோக மையமாகப் பயன்படுத்தி சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இவ்வாறான நுணுக்கமான முறைகளைக் கையாள்வது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here