சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

Date:

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை முன்னேற்றி வருகிறது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“எமது நாட்டின் முக்கியமான பண்பாட்டு திருவிழாவான புத்தாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில், நாடாகவும் உலகளாவிய அளவிலும் பல சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஒரு புறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை உள்ளது. அந்தப் போர் தொடர்ந்தாலும் அல்லது முடிந்தாலும், அதன் தாக்கம் இன்னும் சில மாதங்கள் நீடிக்கும். அதேபோல், நாம் எதிர்கொண்ட ‘டிட்வா’ புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களும் உள்ளன.

இவ்வாறான சவால்கள் மத்தியிலும், நாம் தளராமல் நிலைத்தன்மையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (15) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...