அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை இல்லாததால் நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அத்துடன் கெரவலப்பிட்டியவில் உள்ள அனல் மின் நிலையம் எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சில பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள வருகின்றமை குறிப்பிடத்தக்கது.