தினமும் 6 1/2 மணித்தியால மின்வெட்டு

Date:

கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நேற்று (05) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தினமும் 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, A முதல் F வரையிலான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

அதற்கமைய,G முதல் L வரையிலான வலயங்களுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 4 மணி நேரமும், இரவு 07.30 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன், கொழும்பு முன்னுரிமைப் பகுதியில் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...