கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் கிளிநொச்சியில் சடலமாக மீட்பு

Date:

லண்டனில் இருந்து திரும்பி கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தனிமையில் வசித்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த பெண் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு காணாமல்போயிருந்த குறித்த பெண்ணின் சடலம் பொதி செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி – ஸ்கந்தபுரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் சற்று முன்னதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.குறித்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை அழைத்து சென்று பொலிசார் அடையாளம் காட்டியுள்ளனர்.
குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக தெரியவருகின்றது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
3வருடங்களுக்கு முன்பாக லண்டனில் இருந்து வந்து கிளிநொச்சி அம்பாள் குளம் உதயநகர் பகுதியில் உள்ள காணியை பார்ப்பதற்காக குறித்த பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந் இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிட்த்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி நாடு திரும்பினார்

மாலைதீவுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

BYD ATTO 3 கார் இறக்குமதியில் பாரிய வரி மோசடி!

அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் இலங்கை சுங்கத்துறையினரால் சுமார் 1100 BYD ATTO...

கொஸ்கொடயில் இளைஞர் சுட்டுக் கொலை

கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

சீட் பெல்ட் அணியாவிட்டால் சிக்கல்

வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக...