அரசாங்கத்தில் இருந்து விலகிய 42 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (10) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்று சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்றதுடன், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
கலந்துரையாடலின் முடிவில் இரு தரப்பு உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கலந்துரையாடல் தொடர்பான விபரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாது எனவும் மேலும் கலந்துரையாடல்களை தொடர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.