தீர்வின்றி முடிந்த பேச்சுவார்த்தை

Date:

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.

எவ்வாறாயினும் நாளை (12) ஜனாதிபதியுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10) இரவு 7 மணியளவில் ஆரம்பமானது.சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த 11 அம்ச தீர்மானத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த பிரேரணையில் ஜனாதிபதி பல திருத்தங்களைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்கள் குறித்தும், புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் பிரதமரை நியமனம் அல்லது புதிய அமைச்சரவையை நியமனம் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.ஏற்கனவே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...