நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

0
219

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கடுவெல, வெலிஹிந்த வீதி பகுதியில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஆவார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு கைத்துப்பாக்கி வகை துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here