மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவரது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கட்சித் தலைவராக நியமிக்க மொட்டுக் கட்சி குழுவொன்று தயாராகி வருகிறது.
ஜனாதிபதியை சந்தித்த மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதுகுறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் அனைத்து மொட்டுகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சி வரிசையில் அமைர்ந்து நாமல் ராஜபக்ஷவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.