முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பிரியங்கரவுக்கு, இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில், இவ்வாறு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் ‘ஊழல்’ குற்றத்தை புரிந்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு மே தின பேரணியில் பங்கேற்ற தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக பிரதிவாதி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் 320,000 ரூபாய் தொகையை விடுவித்த சம்பவம் தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
