பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி சபாநாயகர் பதவியில் இம்மாத இறுதி வரை மட்டுமே நீடிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார் .
அண்மையில் பாராளுமன்றத்தில் தாம் தெரிவித்த அறிக்கையின் பிரகாரம் இன்று அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த வாரம் பாராளுமன்றம் புதிய பிரதி சபாநாயகரை நியமிக்க வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் அதற்கு திலான் பெரேரா அனுர யாப்பா ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் .