சுதந்திரபுரம் பகுதியில் 89 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!

0
269

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிலில்  கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுதந்திரபுரம் கரிசல்வெளி கடற்கரையில் 29ஆம் திகதி மாலை  உலங்கு வானூர்தி ஒன்று  கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் அடுத்த நாள் 30ஆம் திகதியே

கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடற்படையினர் பொலீஸ் விசேடஅதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சுதந்திரபுரம் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலீஸ் விசேட அதிரடிப்படையினர் கஞ்சாவினை கடத்தி உந்துருளியில் கடத்திசென்றுவேளை மூன்று உந்துருளியினையும் நால்வரையும் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்களிடம் இருந்து 89 கிலோ பொதிசெய்யப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மூங்கிலாறு பிரதேசத்தினை சேர்ந்த மூவர் மற்றும் விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் என 44,24,24,30 அகவையுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய உந்துருளி மூன்றும் மீட்கப்பட்டுள்ளன கைப்பெற்றப்பட்ட கஞ்சா மற்றும் சான்று பொருட்களை  விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளதுடன் இவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.இந்த கடத்தலை கண்டறிய விமானப்படை,கடற்படை ஆகியவற்றுடன் பொலிசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here