ஞானசார தேரருக்கு விடுதலை கோரி ஜனாதிபதி செயலகம் முன்பாக தொடரும் போராட்டம்

0
24

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்று (15) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டியிலிருந்து ஆறு நாட்களாகப் பாதயாத்திரையாக கொழும்பை வந்தடைந்த பௌத்த பிக்குகள், நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகச் சென்றனர். இதன்போது, அவர்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாநாயக்கவும் வெளியே வந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஜனாதிபதி மன்னிப்பில் காணப்படும் தொழில்நுட்பக் குறைபாட்டைத் திருத்த நடவடிக்கை எடுக்குமாறு பௌத்த பிக்குகள் இதன்போது ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கோரியிருந்தார். எனினும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர், நேற்று இரவு முழுவதும் குறித்த இடத்தில் தங்கியிருந்து தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here