சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அங்கு வருகை தந்துள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கடும் மழையையும் பொருட்படுத்தாது கொழும்பை வந்தடைந்த பௌத்த பிக்குகள், தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், அவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
