அக்குறணை விபத்தில் 6 பேர் பலி

0
31

கண்டி – அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் சீமெந்து கலவை லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 6 ஆக உயர்ந்துள்ளதுடன் 5 பேர் பலத்த காயங்களுடன் அக்குறணைப் பிரதேச
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் எட்டு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்துடன், இச்சம்பவத்தின் போது வீதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here