பல்லேகலே தும்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக பல்லேத்தன்ன தெரிவிக்கையில், குறித்த கைதி நேற்று (01) பிற்பகல் சிறைச்சாலை மதிலுக்கு அருகிலிருந்த பாதுகாப்புக் காவல் கோபுரத்தில் ஏறி, அங்கு கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார்.
இதன்போது, குறித்த அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கைதி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் விளக்கமறியல் கைதி எனவும், கண்டி, கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
