சஜித் பிரேமதாச தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் எண்ணெய் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள ராஜித சேனாரத்ன, இவ்வாறான நிலையில் இலங்கைக்கு ஆதரவளிக்க எந்தவொரு நாடும் அல்லது சர்வதேச அமைப்பும் முன்வராது எனவும் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு சாதகமான செய்தியை வழங்குவதே ஒரே தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் அமையும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருளை சலுகைக் கடன்களின் கீழ் இறக்குமதி செய்யும் வாய்ப்பும் இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும் கிடைக்கும் என்றார்.