ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, கோப் கூட்டத்தில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் (CEB) முன்னாள் தலைவர் பெர்டினாண்டோவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெர்டினாண்டோ பின்னர் தனது அறிக்கையை வாபஸ் பெற்று, மின்சார வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற கோப் குழுவின் கூட்டத்தின் போது இந்த அறிக்கை மீளவும் ஆராயப்பட்டது. பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்த போது இந்தியாவிடம் கடன் பெற்றதாகவும், அதன் வரவு தனக்கென மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் அளுத்கமகே கூறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நெருக்கமாக செயற்படுவதுடன் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் திட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.