நாட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் தான் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், தற்போது செய்ய வேண்டியது அப்பிரச்சினைக்கு விடை காண்பதே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது பங்களிப்பை நிறைவேற்றுவதன் மூலம் சவாலை வெற்றிகொள்ள முடியும் எனவும், தான் ஏறியது மூழ்கும் கப்பலில் அல்ல எனவும் வேகமாக ஊசலாடும் கப்பலில் என்றும் அந்த ஆட்டத்தை தன்னால் நிறுத்த முடியும் எனவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார்.
யுத்த காலத்தில் முதலீட்டுச் சபையின் தலைவராக தாம் கடமையாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த நேரத்திலும் நாட்டுக்குத் தேவையான முதலீடுகளை கொண்டு வர முடியும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.