ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு இடைக்கால ஏற்பாடுகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது. ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் இதனை ஓர் நிபந்தனையாக முன்வைத்தமை சரியான விடயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.