அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினருடன் நேற்று (25) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலை நடத்தியது.
இதன்போது சுகாதாரத்துறை மற்றும் அதன் பணியாளர்கள் மற்றும் நாட்டின் குடிமக்கள் தற்போது எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மக்களுக்கு நட்பு ரீதியாகவும், கண்ணியமாகவும், முக்கியத்துவமாகவும் சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் கடமைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பின் மீதும் கவனம் செலுத்தப்பட்டது.