இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் அனைத்து வகையான பெற்றோலின் விலை லீட்டருக்கு 35 ரூபா அதிகரித்துள்ளதுடன் டீசல் 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைபடி...
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் 2022 ஏப்ரல் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு அறிவித்தனர்.
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திர சமூகத்திற்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் இணைப்பு நிதியுதவியை வழங்குமாறு நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.
பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், பரந்தளவிலான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
இ.தொ.கா., 'இப்போதைக்கு' வாக்களிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்பது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார்.
எதிர்கட்சிகளின் பாதை ...
நாட்டில் டொலர்கள் இல்லை என்கிறார்கள் . ஆனால் நான் சொல்கிறேன் நாட்டிலுள்ள டொலர்கள் எல்லாம் ராஜபக்சக்கள் சட்டைப்பைக்குள் இருக்கின்றது .
திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்துப் பேசிய...