யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறையில் விளக்க மறியலில் உள்ள 54 இந்திய மீனவர்களையும் பார்வையிட்டு புதுவருடத்தின்போது தமது ஆறுதலையும் தமது நிலமையினையும் எடுத்துக் கூறும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
டிசம்பர் மாதம் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் வட கடலில் கைதான 68 பேரில் 13 பேர் வவுனியா சிறையிலும் எஞ்சியோர் யாழ்ப்பாணம் சிறையிலும் உள்ள நிலமையில் ஒருவர் சிறுவன் என்ற அடிப்படையில. விடுவிக்கப்பட்டபோதும் சிறுவனும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலேயே பராமரிக்கப்படுகின்றார்.
இவ்வறு உள்ள 55 இந்திய மீனவர்களையே இன்று மதியம் ஒரு மணிக்கு யழ்ப்பாணக் குடாநாட்டு மீனவ அமைப்புக்களின் பி்ரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.