Tuesday, October 15, 2024

Latest Posts

நம்பிக்கைமிக்க புத்தாண்டாக மலரட்டும்.! – சஜித் வாழ்த்து

வெற்றிகளைக் காட்டிலும் ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மனசாட்சிக்கு இணங்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதைத் தவிர, இன்றுவரை அழுத்தங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் இலங்கை மக்களுக்கு ஒரு போலியான விசித்திர உலகத்தைக் காட்டி வெற்று வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாவது இலங்கை மக்களை அவமானப்படுத்துவதாகவே அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சுமார் 15,000 குடிமக்கள் பலியாகிய கொரோனா பாதிப்புக்கு மத்தியில், புத்தாண்டின் முதல் நாளில் வழக்கம்போல் பால் பொங்கவோ, சமைக்கவோ, முடியாத அளவுக்கு பொருளாதாரம் வங்குரோத்தாகி விட்டது. எந்நேரமும் கேஸ் சிலிண்டர் வெடிக்குமோ என்ற பயத்தில் இல்லத்தரசிகள் சமயலறைக்கு தயங்கித் தயங்கிச் செல்ல வேண்டிய நிலையில்.

நாடு தனது கடைசி இருப்பைக் கூட இழந்து புதிய ஆண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டில் பெரும் கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, கல்வி கேள்விக்குறியாகி, இளைஞர்கள் வேலையிழந்து விரக்தியில் வாடும் சூழலில், பசியால் அழும், ஊட்டச்சத்து குறைந்த, நிறை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் சூழலில். வருங்காலத்தைப் பற்றி.விவசாயிகள் அதன் பாழடைந்த வயல்களில் பெருமூச்சு விடும் வேளையில், தொழிலாளர் சமூகம் தனக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச சலுகைகளையும் இழந்து நிற்கும் இவ்வேளையில் நாம் புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம்.

அதிகாரத்தின் நிகழ்ச்சி நிரலை நம் கையில் வைத்துக்கொண்டு இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள முடியாது, ஆனால் இந்த சீரழிந்த சூழ்நிலையிலிருந்து கூட்டு முயற்சியின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.தேசிய பேரழிவு ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் குறுகிய அதிகார வெறிக்குப் பதிலாக தூய்மையான மக்கள் சார்பு வேலைத்திட்டத்தில் இறங்குமாறு இந்த நாட்டின் பிரஜைகளின் தலைமுறை என்ற வகையில் மீண்டும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு பேரழிவுகளுக்கு முகம் கொடுத்து எவ்வாறு அந்தத் துன்பங்களில் இருந்து எழுந்து நிற்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, மேலும் இந்த நாட்டின் இரண்டு கோடியே இருபது இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் மற்றும் எதிர்கால சந்ததியின் பெயரால் பொறுப்புடன் செயல்படுவதற்கான முழுமையான வாய்ப்பு வந்துள்ளது என்பதையும் மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

இந்த துரதிர்ஷ்டவசமான காலத்தில் உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் புதிய சிந்தனையின் படிப்பினையை இயற்கையே அமைதியாக நமக்குக் கற்றுத் தந்துள்ளது. மேலும் இது பற்றி உறுதியாக சிந்தித்து புத்தாண்டை ஒரு புதிய தொடக்க உணர்வை அடைந்து கொள்ள எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.இலங்கையின் அனைத்து அன்புக்குரிய மக்களுக்கும் மீண்டும் ஒரு தேசமாக எழுச்சி பெறுவதற்கான உன்னத அபிலாஷைகளை அடைவதற்கான வலிமையும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.