களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் மற்றுமொரு பிரதிநிதியும் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 10, 2022 அன்று கல்வி அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது வாயிலை சேதப்படுத்தியதாக இரு மாணவர் சங்க தலைவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் சங்கப் பிரதிநிதி டில்ஷான் ஹர்ஷன ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாளை (ஜன. 03) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
N.S