ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து – 367 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்

0
176

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 367 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விமானத்தின் ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறியதால் மக்கள் பதற்றமடைந்தனர். விமானம் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 367 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்ன நடந்தது அல்லது பயணிகளுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்பது பற்றி முழுமையான தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.

விமான நிலைய அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹனேடா விமான நிலையத்தின் கடலோர காவல்படை அதிகாரி ஒருவர், விபத்து குறித்தான விவரங்களை சரிபார்த்து வருவதாகவும், விமானங்கள் இடையே மோதல் நடந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்த விபத்தில் எங்களுடைய விமானமும் சம்மந்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here