2024 ஜனவரி 1 ஆம் திகதி 101 நலத்திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கி வைத்துள்ளார்.
அதில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்வதன் நோக்கமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் ரூ.1,00,000 ஒதுக்கீடு செய்துள்ளார்.
1.திருகோணமலை கோணேஸ்வர ஆலயம்
2.அம்பாறை புத்தங்கல பௌத்த விகாரை
3.திருகோணமலை பாலையூட்டு புனித லூர்து தேவாலயம்
4.காத்தான்குடியில் அல்-அக்ஸா பள்ளிவாசல்
மேற்கூறிய மத வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நிதி வழங்கி வைக்கப்பட்டது.