நேற்று (03) நள்ளிரவு முதல் அனைத்து வகை மதுபானங்களுக்கான வரியை 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிகரெட் மீதான வரியையும் 20% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை 105 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
85 ரூபாவாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 100 ரூபாவாகும்.
70 ரூபாயாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 80 ரூபாயாக உயரும்.
மேலும் 60 ரூபாவுக்கு விற்கப்பட்ட சிகரெட்டின் புதிய விலை 70 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
இதேவேளை, 15 ரூபாவாக இருந்த 60 மில்லிமீற்றருக்கு மிகாத சிகரெட்டின் விலை 24 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
N.S