நாளுக்கு நாள் வலு பெறுகிறது சஜித் அணி – முன்னாள் அமைச்சர் ஆதரவு

0
222

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயாஷ்ரித திசேரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரை நாத்தாண்டிய ஆசன அமைப்பாளராக நியமித்துள்ளார்.

அவர் பிரபல அரசியல்வாதியான புரோட்டஸ் திசேராவின் மகனாவார். மேலும் அவர் பல சந்தர்ப்பங்களில் இருந்த அரசாங்கங்களில் பல சக்திவாய்ந்த அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here