ரஞ்சனுக்காக புதிய போராட்டம்

Date:

ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எப்போதும் போராடும் மனிதாபிமான மிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சகல ஜனநாயக உரிமைகளுடன் கூடிய விடுதலைக்கான போராட்டம் இந்த வருடத்தில் புதிய சுற்றில் ஆரம்பிக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி முழு அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும், தமது கட்சியின் இளம் உறுப்பினர்களின் பங்கேற்புடன் போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு தாம் பல தடவைகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்,பல சந்தர்ப்பங்களில் வாய்மொழி மூலமாகவே சாதகமான பதில்கள் கிடைத்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது,இன்று வரை நடைமுறையில் செயல் முறைப்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்திப்பதற்காக இன்று (03) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...