சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அருகாமையில் நடைபெற்ற மௌன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மருதானை டெக்னிக்கல் சந்தியில் பொலிஸாரால் எதிர்க்கப்பட்டனர்.
முன்னறிவிப்பின்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக செல்ல முடியாது என பொலீசார் குழுவினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
எனினும், இரு தரப்பினருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பிரயோகம் ஏற்பட்டதையடுத்து, வீதியை விட்டு விலகி பாதசாரி பாதையில் செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
























