ரணிலின் வடக்கு விஜயம் ; விமானப்படை தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

0
83

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) காலை பாதுகாப்பு உத்தியோகத்தரால் இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்றைய தினம் (05) வவுனியா விமானப்படை தளத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் அதிபரின் பாதுகாப்புக் கருதி வவுனியா விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்றுக் கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இத்தனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளார்.

கைது செய்த இளைஞனை பாதுகாப்பு உத்தியோகத்தர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவரிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வெட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here