வீணைச் சின்னத்தில் போட்டியிட தயாராகும் டக்ளஸ்!

0
131

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ‘வீணை’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) தீர்மானித்துள்ளது.

ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கொழும்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது

ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளரும் கிழக்கு பிராந்திய அமைப்பாளருமான ஸ்ராலினின் ஒருங்கிணைப்பில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையிலான வேலைத்திட்டத்துடன் செயற்பட முன்வருகின்ற பல்வேறு தரப்புக்களையும் இணைத்துக்கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஈ.பி.டி.பி.யின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here