Saturday, November 23, 2024

Latest Posts

மத்திய வங்கி ஆளுநரின் கருத்துக்கு எதிர்கட்சித் தலைவர் அதிரடி பதில்

பணம் அச்சடிக்கப்பட்டாலும் பணவீக்கம் அதிகரிக்காது என பொருளாதாரத்தின் அடிப்படைகள் கூட தனக்கு தெரியாதவர் போல மத்திய வங்கியின் ஆளுநர் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த நாட்டை ஆர்ஜென்டினா, சிம்பாப்வே, வெனிசுவேலா போன்ற நாடுகளை நோக்கித் தள்ளவே மத்திய வங்கியின் ஆளுநர் செயற்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்களினால் முழு நாடும் அழிவை நோக்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 35 ஆவது கட்டமாக, இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்து ஏழு ஆயிரம் ரூபா (ரூ.2,457,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் இன்று (07) வவுனியா மாவட்ட தேசிய வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்து ஏழு ஆயிரம் ரூபா (ரூ.2,457,000) பெறுமதியான Dialysis Machine with Portable RO System இயந்திரம் ஒன்றே இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் வவுனியா மாவட்ட தேசிய வைத்தியசாலையின் பனிப்பாளர் வைத்தியர் ராஹுல் அவர்களிடம் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ‘எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இது வரை 34 கட்டங்களில் 1016 இலட்சம் (101,610,000) ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.