Sunday, December 8, 2024

Latest Posts

நாட்டு மக்களை பிரித்து ஆட்சிக்கு வந்தவர்களால் அதிகாரத்தில் நீடிக்க முடியாது – சஜித்

இணையவழிக் கல்விக்காக தொலைபேசி வசதியில்லாத எண்ணிலடங்கா பிள்ளைகள் உள்ள நாட்டில் அந்தச் சிறுவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாரபட்சமின்றி குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.

ஒரே நாட்டில் மக்களைப் பிரித்து அதிகாரத்தைப் பெற்ற எவராலும் அதிகார இருப்பை ஸ்திரப்படுத்த முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை வழங்கும் முன்னோடித் திட்டமான ‘பிரபஞ்சம்’திட்டத்தின் ஆறாவது கட்டம் நேற்று (07) ஆரம்பமானது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை,தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற,ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ முன்னோடித் திட்டத்தின் ஏழாவது கட்டத்தில், ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (750,000) மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.